Wednesday, 15 August 2012

தொடரும்,,,,,,,,,,,,,,,,,,,


அன்று விநோதமான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரசுதரப்பு வழக்குரைஞர் குற்றவாளிகளை விசாரித்துகொண்டிருந்தார்.முதல் குற்றவாளியாக காவல்துறையால் சொல்லப்பட்டவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஐயா நான் மரம் வெட்ட கூலி பேசி அந்த வீட்டிற்கு ஆள் அனுப்பினேன். ஆனால் அவரோ வேறு நால்வரை அங்கு அனுப்பி,  அந்த வீட்டு மரத்தை வெட்டாமல் அந்த வீட்டில் உள்ள நபரையே வெட்டி கொன்றுவிட்டனர். ஐயா , அந்த செயலுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றான்.

கொலை செயலில் குற்றவாளிகளாக சொல்லப்படும் அந்த நால்வரையும் உங்களுககு முன்பே தெரிந்தவர்களா? என்று வழக்குரைஞர் முதல் குற்றவாளியை கேட்டார், தெரியது ஐயா என்றான்,  சரி நீங்கள் போகலம் என்றர்.

அந்த நால்வரும் குற்றவாளி கூண்டிற்க்கு அழைக்கப்பட்டனர்.

விசாரணை துவங்கலாயிற்று,  உங்கள் மீது உள்ள கொலை குற்றம் ஆதாரத்துடன் காவல்துறையினரால் நிருபிக்கப்பட்டுள்ளது.உங்களுக்கும், கொலை செய்யப்பட்டு இறந்த நபருக்கும் எந்த முன் விரோதமும் சண்டையோ ஏதும் இல்லை என்பதையும் தாங்களே இந்த நீதி மன்றத்தில் ஒப்புக்கொண்டீர்கள். குற்றவாளி  A1 உங்களுக்கு  பணம் கொடுத்து அநத வீட்டு நபரை திட்டமிட்டு உங்கள் வழியாக இந்த கொலை செயலை அரங்கேற்றி  இருக்கின்றார் என்பதும் தெளிவாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன.

முதல் குற்றவாளியாக சொல்லப்படுவருக்கும் இந்த கொலைக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது. அவர் மரத்தை வெட்டத்தான் ஆள் அனுப்பினார் . அதிலும் அவர் நேரிடியாக மரத்தை வெட்ட கூலி பேசி அனுப்பிய அந்த நபர் செல்லாமல் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவர் தன் கொண்ட பழியை தீர்பதர்க்காக இந்த நால்வரையும் A1 குற்றவாளி அமர்த்தி திடிரென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கி அந்த வீட்டு நபரை கொன்று விட்டனர்.

எனவே முதல் குற்றவாளி என சொல்லப்படும் நபருக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் நீதியரசரை கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில சம்பந்தம் இல்லத நபர்களை இப்படி கூலிக்கு அமர்த்தி, இவர்களுக்கு , சம்மந்தமே இல்லத நபர்களை கொலை செய்ய பணம் கொடுத்து இவர்களை அனுப்பிய A1 குற்றவாளிக்கு மரணதண்டனை , அதாவது சாகும் வரைதூக்கில வேண்டுமாய் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதே நேரத்தில் பணத்திற்காக கொலையும் செய்யலாம்,  எளிதில் தண்டனையில் இருந்தும் வெளியில் வந்துவிடலாம்,  என்று நினைத்துமுன் பின் தெரியாத நபர்களை  பணத்திற்க்காக மட்டுமே கொலை செய்யும் இந்த கொலைகார கூட்டம் சட்டத்தையும், சமுக நீதியும், அதன் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் அழித்து வருகிறது. எனவே மனித இனத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும் அச்சுறுத்தலாக  வாழும்  இவர்களுக்கு மாண்புமிகு நீதயரசர் அதிகபட்ச தண்டணை மரணதண்டனை வழங்கி  இந்த மனித இனத்தை இந்த கொலைகார கூட்டத்திடமிருந்து காத்தருளுமாறு மிக பணிவன்புடன கேட்டுக்கொள்கின்றேன்.

மாண்புமிகு நீதியரசர் வழங்கிடும் ஞாயமான தீர்ப்பால் இது போன்ற கொலையில் இருந்து அழியமல் இந்த மனித இனம் காக்கப்படுவது உறுதி என்று கூறி அரசு வழக்குரைஞர் அமர்ந்தார்.

மயில்வாகனா

Thursday, 2 August 2012

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா


மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம்

தமிழ்த்தாய் வாழ்த்து 

அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
தமிழ் மண்ணை வணங்குவதைப் போல் ஒரு இன்பம் இலலை

புரட்சித்  தலைவிக்கு  நிகர் இங்கு  எவருமே இல்லை

கத்தி இன்றி ரத்தம் இன்றி  யுத்தமும் இன்றி
சிங்கள ஓநாய்களை  தமிழ்நாடு விட்டு விரட்டிவிட்டாய்

பிள்ளை கிள்ளி தொட்டிலாட்டும் நாடகத்தை
முடித்தே வைத்தாய்

உலக தமிழர்களின் நெஞ்சங்களை
மயிலிறகால் வருடிவிட்டாய்

தமிழ் மக்களின் உணர்வு உடமை பாதுகாத்திடும்
தமிழ் அரணாய் திகழ்கின்றாய்

ஆறரை கோடி தமிழ் நெஞ்சங்களில்
சிங்க ஆசனம் போட்டே அமர்ந்துவிட்டாய்

புரட்சித் தலைவரில்லா குறைதனை மக்களிடத்தே
போக்கி நின்றாய்

வாழ்க வாழ்க வாழ்கவே
தமிழ்ச் சமுகம் காத்திடும்
புரட்சி அன்னை வாழியவே

மயில்வாகனா

Thursday, 22 March 2012

தமிழ் புதையலில் சிங்களமா?

கொங்கு தமிழ் நெஞ்சை அள்ளும்
இன்பத் தமிழ் என்றும் இளமை கொஞ்சும்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
இலங்கைத் தமிழும் எதிலும் வெல்லும்

பண்டைத் தமிழ் இலக்கணம் காலம் தொட்டு -
சிங்களனுக்கும் இது தெரிந்தே இருக்கும்.

குள்ளநரி அரசியல் சூழ்ச்சி
கொடுந்துயர் தமிழனுக்காச்சு

பிரபாகரன் வீழ்ச்சி சிங்களம் வளர்ந்திடுமோ
தமிழ் அலை அங்க ஒய்ந்திடுமோ

அன்று நடந்ததுவோ ராவண ஆட்சி
ஆப்பு அது அடித்ததுவோ ராமன் அவன் ஆட்சி

இன்று அது நடப்பதுவோ ராஜபட்சி ஆட்சி
பின்லாடனர வீழ்த்தியதும் ஒரு ராஜ அரசு ஆட்சி

உம் மண்ணில் தமிழ் அதை புதைத்தாய் - பின்னாளில்
சிங்களமா வளரும்
தமிழ் மட்டுமே மலரும்

மயில்வாகனா

Monday, 20 February 2012

கொலுசு சத்தம்

ஒரு சிறிய கிராமம் அதில் தந்தையும் வாலிப  மகனும் வாழ்ந்து வந்தனர்,  அவருக்கு பாம்பு பிடித்து மக்கள் கூடும் இடங்களில் வித்தைகாட்டி அதில் கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தார், அவருட்ன காட்டிற்கு செல்லுவது, பாம்பை பிடிக்க உதவுவது அவர் முன்னிலையில் பாம்பை பிடிப்பது அவருக்கு ஒரு பணிவான மகனாக வாழ்நது வந்தான்



அன்று அவர்கள் வீடு திரும்பும் போது ஒரு பெரிய நாகத்தை இருவருமே பார்த்தார்கள், அதைப் பற்றி தந்தை எதுவுமே பேசாமல் வந்துகொண்டு இருந்தார்,

அப்பா ,,, அந்த பாம்பு பற்றி எதுவும் பேசவிலையே என்றான்,

இது அவர் எதிர்பார்த்தது தான் என்றாலும் அதை அவர் விரும்பாதவராகவே இரு்நதார், என்றாலும் மகனே நீ இப்போது பார்த்த நாகம்  ஒரு சாதாரண நாகம் அல்லவே, இது ஒரு ராஜநாகம், இதை பிடிப்பதும் சுலபமானதல்ல, நான் பல வித கடுமையான  விரதங்கள்  மனக்கட்டுபாடு பயிற்சிகள் அனுபவ்ஙகள் கொண்டு இந்த தொழிலை செய்து வருகின்றேன், மேலும் நான் பாம்புகளை திரும்பவும் கட்டிலேயே விட்டுவவிடுவதும் நீ அறிந்ததே, இதை பிடிக்கும் அளவிற்கு உனக்கு அனுபவம் இல்லை மகனே அதனால் தான் அமைதியாக இருந்தேன் என்றார்

அன்று இரவு முழுதும் அவனால தூங்க முடியவிலலை, நாம் இவ்வளவு நாளாக தந்தையுடன் இருந்தும நம் மீது நம்பிக்கை ஏற்படவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டான், எப்படியாவது நாளை அந்த பாம்பைபிடித்து தந்தையிடம் திறமையானவன் என்று பெயர்வாங்கியே ஆகவேண்டும் என்ற எண்ணத்திலேயே தூங்கிப்போனான்.

விடியும் முன்பே வீட்டை விட்டு கிளம்பி போய்விடடான், தந்தை மகனைக் காணாமல் தவித்துக்கொண்டிருந்தார்,

அது ஒரு குறுகலான தெரு, அங்கே ஒரு கூட்டம் ஆரவாரத்துடன் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது,  நடுவில் அவன் அந்த ராஜநாகத்தை சாதாரணமாக தன் மகுடிக்குள் கட்டுபடுத்தி ஆடவைத்துக்கொண்டிருந்தான்,

பாம்பு மிகவும் கருப்பாக மதிய வெயிலில் உயரமாக ஆக்ரோக்ஷமாக தலையை
அங்குமிங்கும் திருப்பி ஆடிக்கொண்டிருந்தது, அனைவரும் பயத்தில் ஆழ்த்தியிருந்தது, தந்தையும் செய்தி கேட்டு கவலையுடன் அலங்கமலங்க கூட்டதை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தார்.

மெல்ல மெல்ல ஒரு கொலுசொலியும் அந்த கூட்ட சத்ததிலும் தவழ்ந்து வந்தது,,  மகுடிக்கும் மீறிய அந்த கொலுசு சத்தம் மகுடிவாசிக்கும் அவனுக்குள்ளும் ஒரு இனிய அதிர்ச்சியை  நெஞ்சுக்குள்ளும் அள்ளி வீசியது,

ஒரு கணம் ஒலி வந்த திக்கை நோக்கினான், அழகிய மையிட்ட கருவிழிகள் அவனை மாடத்திலிருந்து ஒரு கணம் திணரடித்தன,

அம்மாவென்று அலறி தரையில சாய்ந்தான், மகனே என்று தந்தையும் அலறினார், கடுநாகம் கடுமையாக அவனை தீண்டி  இருந்தது, மயக்க நிலையிலே தந்தை முகத்தைப்பார்த்து கண்கலங்கினான், மகனே இப்படி வீழ்ந்துவிட்டாயே , அப்பா  ,,,, நான் பிழைக்கமாட்டேன என்னை மன்னிததுவிடு்ஙகள் என்றான்,

ராஜநாகம் மிகவும் விஷமுள்ளது, கட்டுப்படுத்த முடியாதது, வேண்டாம் என்று சொன்னேன் இப்படி உன்னை தீண்டிவிட்டதே என்று அழுதார்,

அப்பா என்னை பாம்பு தீண்டும் முன்பே ராஜநாகத்தை விட விஷமுள்ள ஒரு கன்னிபாம்பு தீண்டி விட்டது என்ற போதே உயிர் பிரிந்திருந்தது.


மயில்வாகனா

Friday, 10 February 2012

மாண்புமிகு


         

காசு அது இல்லனா
கடவுளுக்கும் கேட்காது காது அது
கல்லம் கபடம் இல்லாத  மனிதயினம்
பூமியில் வாழயிங்கே இடம் ஏது

காசு அது இல்லன்னா
கல்லறைக்கும் கல்நெஞ்சம்

நல்லவன் கையில காசு இல்ல
வல்வனாயிருந்த நீ நல்லவனா இல்ல

காசு ருக்கும் மினிஸ்டரும்
காசுக்காக மயங்குறான்
பவரு இருக்கும் வரையில
தவுசன் லைடடு பல்பாட்டம் மின்னுறான்
பவரு அது போனபின்னே
பீஸ்போன பல்பாட்டம்
வக்கில தேடி ஒடுறான் வய்தா வாங்க
வாய்தா வாஙக வக்கில தேடி ஓடுறான்

சாமி ய தை கும்பிடபோனா
சைத்தானொல்லாம் சாமியாரா அலயுது

காசு ருக்கும் மனுசனுக்கு
சட்டம் அது வலையுது
நெளிது குழையுது
சலாம் போட்டு போவுது

இல்லா தவன த் தான
தூக்கி போட்டு மிதிக்குது
நல்லா தூக்கி போட்டு மிதிக்கிது
அறிவு இல்லாதவனை தான
தூக்கிபோட்டு மிதிக்கிது

அஞ்சறிவெல்லாம் ஆறறிவா ஆகணும்
நம் அறிவாற்றல் மிகுதியால்
நம் நாடும் வீடும் நலம் பெறவேணும்
சுயநலம் இல்லா மாண்பு மிகு
மக்களாட்சி இப் பூவி தனில்
மலர்ந்திட வேண்டும்.

மயில்வாகனா

Sunday, 5 February 2012

தொடரும் காதல்







கால்கடு்கக நின்றாலும் காதல் அது கைகூடவில்லை!
கை காசு கரைந்தாலும் காதல் அது கைகூடவில்லை!
நட்பு அது தொலைதாலும் காதல் அது கைகூடவில்லை!
இளமையது தொலைந்த பின்னும் காதல் அது கைகூடவில்லை!
தொலையாமல் என்னை மட்டும்மே தொலைக்க!
தொடரும் இந்த காதல் ஒரு ஒரு தலைக்காதல்.......

மயில்வாகனா


Thursday, 26 January 2012

என்றும் மறையாது தமிழிசை

கம்ப்யூட்டரையே நம்பி, நான்கைந்து ராகங்களையே தெரிந்துகொண்டு வருடத்திற்கு ஒரு படம் இசைஅமைத்து வானலாவிய புகழை அடைந்த‌ இசையமைப்பாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.  ஏனோ இவர்களது பாடல்களை மீண்டும் ஒரு முறை கேட்க தோன்றுவதே இல்லை வார்த்தைகளும் புரிவதே இல்லை. 

தமிழ்...... கொலைவெறி என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது திரு. இளையராஜாவின் இசையில் ஒரு வருடத்திற்குள் ஐந்து படங்க‌ள் வரை வெளிவந்து இருகின்றன. அனைத்து படங்களின் பாடல்களும் ஒன்றையொன்று தழுவாமலும் தமிழ் வார்தைகள் புரியும்படியும் மனித வாத்திய கருவிகளுடன் உரிய ஆண்குரல் பெண்குரலில் இணைந்து பல இசை நுணுக்கங்களை கொண்டு இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

இசையால் தமிழை திக்கெட்டும் பரவச்செய்த இவர் இசைராஜா மட்டுமல்லாது தமிழ்ராஜாவும் அவரே தான். 

மயில்வாகனா